குவைத்திலுள்ள பிரபல நிறுவனத்துக்கு கனரக மற்றும் இலகுரக வாகன ஓட்டுனர்கள் தேவைப்படுகின்றனர். இது தொடர்பாக, தமிழக அரசுக்குச் சொந்தமான வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
"குவைத் நாட்டிலுள்ள ஒரு முண்ணனி நிறுவனத்திற்குக் கனரக மற்றும் இலகுரக வாகன ஓட்டுனர்கள் உடனடியாக தேவைப்படுகின்றனர். 45 வயதுக்குற்பட்ட குவைத் நாட்டில் 2 வருடங்களுக்கு மேல் வேலைபார்த்த அனுபவத்துடன் அந்த நாட்டு ஓட்டுநர் (ஒரு வருட காலத்துக்கு செல்லத்தக்க) உரிமம் வைத்துள்ள கனரக வாகன ஓட்டுனர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதியுள்ளவர்கள் உடனடியாக தங்களின் கல்வி சான்றிதழ், பாஸ்போர்ட், குவைத்நாட்டு ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றின் நகல்களுடன் 2 புகைப்படத்தை இணைதது, தமிழக அரசு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 120 குவைத் தீனார் சம்பளத்துடன் உணவு மற்றும் குவைத் நாட்டின் சட்டத்திட்டத்தின் படி இதர சலுகைகளும் வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு:
ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேசன்,
48, டாக்டர் முத்துலட்சுமி சாலை,
அடையாறு, சென்னை/20
தொலைபேசி: 044 24464268,269
| < முந்தைய செய்தியை வாசிக்க... | அடுத்த செய்தியை வாசிக்க... > |
|---|