இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: வேலைவாய்ப்பு தமிழகம் பட்டு வளர்ச்சித்துறை உதவி ஆய்வாளர் காலியிடங்கள்!

பட்டு வளர்ச்சித்துறை உதவி ஆய்வாளர் காலியிடங்கள்!

சேலம் பட்டு வளர்ச்சி துறை தலைமை வனபாதுகாவலர் மற்றும் இயக்குனரால் பட்டு வளர்ச்சி துறை உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இது குறித்து மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

 

"சேலம் பட்டுவளர்ச்சி துறையில் உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு மாநில அளவிலான பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரை செய்யப்பட உள்ளது.

பி.எஸ்.சி பட்டப்படிப்பில் தாவரவியல், விலங்கியல், வேதியியல் பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், பட்டு வளர்ச்சித்துறையில் குறைந்தபட்சம் 6 மாதம் முன் அனுபவம் அல்லது ஓசூர் செரிகல்ச்சர் பயிற்சி பள்ளியில் 6 மாத பயிற்சி அல்லது கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட செரிகல்ச்சர் முதுநிலை டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கு வேண்டும்.

01.07.11 ல் பகிரங்க போட்டியாளர்கள் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். பிற இனத்தவருக்கு வயது வரம்பு இல்லை. பதிவு மூப்பை பொறுத்தமட்டில் 28.11.11 வரை பதிவு செய்திருக்கலாம். இந்தக் கல்வித்தகுதியும், பதிவு மூப்பும் உள்ள மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த மனுதாரர்கள் மட்டும் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வரவேண்டும். வரும்போது, வேலைவாய்ப்பக பதிவு அட்டை மற்றும் உரிய கல்விசான்றிதழ்களுடன் நேரில் வந்து தங்களது பதிவு மூப்பைச் சரிபார்த்து கொள்ளலாம்."

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: