இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: வேலைவாய்ப்பு தமிழகம் தொழில்நுட்ப உதவியாளர் பணி காலி இடங்கள் பற்றிய அறிவிப்பு!

தொழில்நுட்ப உதவியாளர் பணி காலி இடங்கள் பற்றிய அறிவிப்பு!

எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை, இயக்குநர் அவர்களால் அறிவிக்கப்பட்ட “தொழில் நுட்ப உதவியாளர்” பணிக்காலியிடங்களுக்கு மாநில அளவிலான பரிந்துரை மேற்கொள்வது தொடர்பாக வேலையளிப்பவரால் அறிவிக்கப்பட்டுள்ள தகுதிகள் பின்வருமாறு:

கல்வித் தகுதி: பள்ளியிறுதி தேர்ச்சியுடன் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் / வாரியத்தால் வழங்கப்பட்ட டிப்ளமோ இன் பிரிண்டிங் டெக்னாலஜி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 01.07.2011 அன்று 30 வயதிற்குள் (பகிரங்க போட்டியாளர்) பிற இனத்தவருக்கு வயது வரம்பு ஏதுமில்லை.

பதிவு மூப்பு: 05.12.2011 வரை பதிவு செய்துள்ள அனைத்து மனுதார்கள்

மேற்கண்ட கல்வித் தகுதியும் பதிவு மூப்பும் உள்ள மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக மனுதாரர்கள் மட்டும் தங்களது பதிவு விவரத்தினை 15.12.2011 அன்று காலை 11.00 மணியளவில்
தங்களது வேலை வாய்ப்பு அலுவலக அடையாள அட்டை மற்றும் உரிய கல்விச் சான்றுகளுடன் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சரிபார்த்துக் கொள்ளுமாறும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் பெறப்படும் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநர் க.பெ.இராசேந்திரன்
அவர்கள் தெரிவிக்கிறார்.

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: