இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: வேலைவாய்ப்பு தமிழகம் புதுச்சேரி ஜிப்மரில் செவிலியர் பணிக்கு ஆட்கள் தேவை

புதுச்சேரி ஜிப்மரில் செவிலியர் பணிக்கு ஆட்கள் தேவை

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்நல அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் புதுச்சேரி Jawaharlal Institute of Post Graduate Medical Education and Research (JIPMER)-ல் செவிலியர் பணிக்கு ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்: Staff Nurse

பதவி கோடு எண்: 04

காலியிடங்கள்: 40 (பொது-21, OBC-10, SC-6, ST-3)

சம்பளம்: ரூ.9,300 - 34,800

வயதுவரம்பு: 07.11.2011 தேதிப்படி 35 வயதிற்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும். அரசாங்கத்தில் இதே பணியில் 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக அனுபவம் பெற்றவர்களுக்கு OBC பிரிவினருக்கு 45, SC/ST பிரிவினருக்கு 47 என்றும் சலுகைகள் அளிக்கப்படும்.

கல்வித்தகுதி: General Nursing and Midwife-ல் டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்து இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

தேர்வுக்கட்டணம்: பொது மற்றும் OBC பிரிவினருக்கு ரூ.500. SC/ST பிரிவினருக்கு ரூ.250. இதனை Accounts Officer, JIPMER என்ற பெயரில் State Bank of India, JIPMER Branch, Puducherry - 605006 -ல் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்ப படிவத்துடன் அனைத்து சான்றிதழ்களையும் அட்டெஸ்ட் பெற்று அனுப்ப வேண்டும்.

விண்ணப்பப் படிவ கவரின் மேல் Application for the Post of Staff Nurse என்று எழுத வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் சென்றடைய கடைசி நாள்: 07.11.2011.

விண்ணப்படிவங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Director,

Jipmer,

Puducherry - 605006

உங்கள் கருத்து

கருத்துரைப்பது தனியுரிமை; பெற்ற சுதந்திரம் பேணுவது நம் கடமை! நாகரீகம் பேணுவது தமிழர் பண்பாடு; அநாகரீக, ஆபாச கருத்துகள் குணத்தின் வெளிப்பாடு!
தமிழ்/English(இந்நேரம்.காம் = iwwEram.kaam அம்மா=ammaa)


Latest Articles: