விஜய் படத்தின் மீது திடீர் வழக்கு: விளம்பரம் தேடும் முயற்சியா?

Wednesday, 11 January 2017 13:44 Written by  இந்நேரம் Published in சினிமா

சென்னை( 11 ஜன 2017): நடிகர் விஜய் நடித்துள்ள பைரவா படத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது படத்திற்கு விளம்பரம் தேடும் முயற்சி என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

சமீபகாலமாக மிகப்பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு படம் வெளியாகும் நேரத்தில் திடீரென வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இது பெரும்பாலும் தள்ளுபடி செயப்பட்டு விடுகின்றன. எனினும் இது தொடர்கதையாகவே உள்ளன. இதனை பலரும் படங்களுக்கு விளம்பரம் தேடும் முயற்சி என்றே கருதுகின்றனர்.

இந்நிலையில் சேலம் மாவட்டம் மேட்டூர் அணையைச் சேர்ந்த இயக்குநர் ஜி.பொருள்தாஸ் என்பவர் சென்னை 11-வது உதவி மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார் அதில், "நான் கடந்த 15 ஆண்டுகளாக திரைப்பட இயக்குநராக பணிபுரிந்து வருகிறேன். நான் ‘பைரவா’ என்ற தலைப்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பே நாயின் சாகசங்களை வெளிப்படுத்தும் வகையில் அனிமேஷன் திரைக்கதை ஒன்றை எழுதியுள்ளேன். தலைப்பையும் பதிவு செய்து வைத்துள்ளேன்.

‘பைரவா’ என்ற தலைப்பு 2017-ம் ஆண்டு ஜன.29 வரை எனது பெயரில் உள்ளது. அந்த படத்துக்கான படப்பிடிப்பை 50 சதவீதம் முடித்துள்ளேன். இந்நிலை யில் நடிகர் விஜய் நடித்துள்ள படத்துக்கு ‘பைரவா’ என்ற தலைப்பை வைத்துள்ளனர். இது தொடர்பாக உடனடியாக சம்பந்தப் பட்டவர்களை அணுகி முறையிட் டேன். அவர்களும் இதுகுறித்து பரி சீலிப்பதாக உறுதியளித்திருந்தனர். இந்நிலையில் ‘பைரவா’ திரைப் படத்தை 12-ம் தேதி திரையிடுவதால் எனக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும். எனவே இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் வரை ‘பைரவா’ திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்." என்று கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம் வழக்கு மனு படம் வெளியாகும் நேரத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் தயாரிப்புத் தரப்பை விசாரித்தே இதனை விசாரிக்க முடியும் என்று விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டது.

Case file against Actor Viyay's  bhairava film. But court postponed the investigation

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.