டேக் ஆஃப் (TAKE OFF) உலக சினிமாவின் அனுபவம்!

By இந்நேரம் April 15, 2017

2014 ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட சினிமா. டேக் ஆஃப். ஃபஹத் ஃபாசில், குஞ்சாகு கோபன், பார்வதி நடிப்பில் சக்கை போடு போட்டுக் கொண்டு இருக்கிறது.

படத்தைப் பற்றி...

2014 ம் ஆண்டு கேரளாவை சேர்ந்த 19 நர்ஸ்கள் ஈராக் நாட்டு மருத்துவமனையில் நாலு மடங்கு சம்பளம் கிடைக்கும் என்பதற்காக ஈராக்கில் உள்நாட்டுப் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அங்குள்ள மருத்துவமனைக்கு செல்கின்றனர்.

ஒரு சந்தர்ப்பத்தில் தீவிரவாதத்தின் உச்சமாக கருதப்படும் ஐஎஸ்ஐஎஸ் உலக தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு, பின்பு இந்திய தூதரகத்தின் உதவியோடு அங்கிருந்து எப்படி தப்பித்து வெற்றிகரமாக இந்தியாவுக்கு வருகின்றனர் என்பதே சம்பவம்.

இப்படிப்பட்ட உலக பிரச்சனை கொண்ட கருவை மையப்படுத்தி இருந்தாலும் அதிலும் பார்வதி மேனன் மூலம் ஒரு உணர்வுப்பூர்வமான உறவை சார்ந்த பின்னணியை வைத்தது சபாஷ் போடவைக்கிறது. தனது குடும்ப சூழ்நிலை காரணமாக தனது முதல் கணவரை விவாகரத்து செய்து கொண்டு கேரளாவில் ஒரு மருத்துவமனையில் வேலைசெய்து செய்து வருகிறார் பார்வதி. அங்கு பணிபுரியும் குஞ்சாகோ போகனுக்கு பார்வதி மேல் காதல் வருகிறது.

ஒரு கட்டத்தில் குஞ்சாகோ போகனை இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார் பார்வதி. பின்பு தனது கணவர் மற்றும் 19 நர்ஸ்களுடன் ஈராக் நாட்டுக்கு வேலைக்கு செல்கிறார். அதன் பின் ஈராக்கில் உள்நாட்டுப் போரில் மாட்ட கணவனை கடத்தி சென்று விடுகின்றனர் தீவிரவாதிகள். பார்வதி தனது கணவரையும், கூட வேலையும் 19 நர்ஸ்களையும் இந்தியன் எம்பசி அதிகாரியாக வரும் பஹத் பாசில் உதவியோடு எப்படி மீட்டு வருகிறார் என்பதே டேக் ஆப்.

பார்வதிக்கு இந்த படம் பெயர் சொல்லும் என்பதில் சந்தேகமே இல்லை, வயிற்றில் குழந்தையுடன் தனது கணவரை பிரிந்து வாடும் நேரத்திலும் சரி, கூட வேலைக்கு வந்திருக்கும் நர்ஸ்க்களை காப்பாற்ற நினைப்பது என மிகுந்த பலம் வாய்ந்த கதாபாத்திரத்தை நன்கு உணர்ந்து சிறப்பாக செய்துள்ளார். அவருக்கு விருதுகள் உறுதி.

இரண்டாவது கணவராக வரும் குஞ்சாகோ போகன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பார்வதி மகனை தனது மகனாக பார்க்கும் போதும், அதை அவன் உதாசினப்படுத்துவதும் என உணர்வுபூர்வமான நடிப்பை காட்டியுள்ளார் .

இந்தியன் எம்பசி அதிகாரியாக வரும் பஹத் பாசில் தனது ஊர் மக்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பதில் காட்டும் அக்கறை, குறித்த நேரத்தில் பக்காவாக பிளான் செய்து படபடக்கவைக்கும் காட்சிகளை பார்வதி மூலம் நகர்த்தி செல்லும் புத்திசாலித்தனமான கதாபாத்திரம்.

டேக் ஆப் உலக சினிமாவின் ஒரு அனுபவம்அ

-தல தளபதி

Rate this item
(0 votes)