பாகுபலி - 2 திரைப்படத்தை வெளியிட எதிர்ப்பு!

By இந்நேரம் April 20, 2017

பெங்களூரு(20 ஏப் 2017): பாகுபலி - 2 திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடக்கூடாது என்று கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பாகுபலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளா. சில ஆண்டுகளுக்கு முன்பு காவிரி பிரச்சினைத் தொடர்பாக தமிழ் திரையுலகம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில், கன்னட அமைப்புகளை கடுமையாக சாடிப் பேசினார் சத்யராஜ்.

இந்த பிரச்சனை பாகுபலி - 2 வெளியிடப்படும்போது விஸ்வரூபமெடுத்துள்ளன. தன்னுடைய பேச்சுக்கு சத்யராஜ் மன்னிப்பு கேட்டால் மட்டுமே 'பாகுபலி 2' வெளியாகும் என்று கன்னட அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே பாகுபலி - 2 வை எதிர்த்து ஏப்ரல் 28ம் தேதி பந்த் நடத்த கன்னட அமைப்புகள் முடிவு செய்துள்ளன. இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது

இதற்கிடையே பாகுபலி - 2 படத்தின் இயக்குனர் ராஜமவுலி ட்விட்டரில் பதிவொன்று இட்டுள்ளார். அதில், " பல வருடங்களுக்கு முன்பு சத்யராஜ் சார் தனிப்பட்ட முறையில் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து பல படங்கள் வெளியாகியுள்ளன. 'பாகுபலி' வெளியாகும் போதும் இப்பிரச்சினையில்லை. ஆனால் இப்போது பிரச்சனை உண்டாக்குவது ஏன்? என்று தெரியவில்லை. 'பாகுபலி' படத்துக்கு கிடைத்த அதே ஒத்துழைப்பை, 'பாகுபலி 2' படத்துக்கும் தர வேண்டும் " என்று பதிவிட்டுள்ளார்.

Rate this item
(0 votes)