டி.வி.சேனல்கள் மீது இயக்குநர் கே.வி. ஆனந்த் பரபரப்பு குற்றச்சாட்டு!

By இந்நேரம் April 21, 2017

சென்னை(21 ஏப் 2017): கவண் திரைப்படத்தில் டி.வி.சேனல்களின் மறுபக்கத்தை தோலுரித்துக்காட்டிய கவண் திரைப்பட இயக்குநர் கே.வி.ஆனந்த் டி.வி.சேனல்களின் சில நிகழ்ச்சிகள் குறித்து குற்றஞ்சாட்டியுள்ளார்.

கே.வி.ஆனந்த் இயக்கிய கவண் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பு பெற்றுள்ளது. பல படங்கள் வந்தாலும் கவண் கூட்டம் இன்னும் குறையவில்லை.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கே.வி.ஆனந்த், "கவண் படத்தில் எந்த டிவி சேனலை குறிப்பாக குறிவைத்து விமர்சித்தீர்கள்? என்று கேட்கிறார்கள். இதுதான் என்றில்லை என்றாலும், லண்டனில் ஒரு டி.வி. சேனல் ரியாலிட்டி ஷோவில், வேண்டுமென்றே நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களை அழ வைத்த சம்பவங்கள் நடந்தது உண்டு, அதை தான் பதிவு செய்தேன்’ என கூறியுள்ளார்.

Rate this item
(0 votes)