ரசிகர்கள் சந்திப்பில் ரஜினி சொன்ன ரகசியம்!

By இந்நேரம் May 15, 2017

சென்னை(15 மே 2017): ரசிகர்களுடனான சந்திப்பில் ரஜினி திமுகவை மறைமுகமாக தாக்கிப் பேசியதாக சிலர் கருதுகின்றனர்.

இந்த வாரம் முழுவதும் நடிகர் ரஜினி ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். இந்நிலையில் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடைபெற்ற ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ரசிகர்களிடையே பேசிய ரஜினி மேலும் தெரிவித்ததாவது:

ரசிகர்களை சந்தித்திருக்க வேண்டும். ஆனால் அது முடியவில்லை. 12 வருடங்களுக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன். கபாலி, எந்திரன் வெற்றி பெற்றாலும் சில காரணங்களால் வெற்றி விழா கொண்டாட முடியவில்லை. வரும் 28ஆம் தேதி அடுத்த படத்தன் சூட்டிங்கை துவங்க உள்ளேன்.

ரஜினி நிலையான முடிவு எடுக்க மாட்டார். பின்வாங்குவார், தயங்குகிறார் என சிலர் கூறினார்கள். நல்ல படங்களை கொடுப்பேன். ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன். படம் ஓடுவதற்காக ஏதாவது சொல்வார். இறைவனின் ஆசியால் உங்களின் அன்பால் அப்படி பண்ண வேண்டிய அவசியம் இல்லை. படம் நல்லா இருந்தால் மட்டுமே ரசிகர்கள் ரசிப்பார்கள். இல்லாவிட்டால் என்ன குட்டி கரணம் போட்டாலும் ஒன்றும் செய்ய முடியாது.

தமிழ் மக்கள் சில விஷயங்களில் ஏமாந்து விடுவார்கள். அது என்ன என்பதை இப்போது கொல்ல விரும்பவில்லை. 21 ஆண்டுகளுக்கு முன் நான் ஆதரித்த கூட்டணியை மக்கள் தேர்தலில் வெற்றி பெற வைத்தார்கள். அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவித்தது விபத்து. படம் ஓடுவதற்காக அரசியல் மாயை காட்டுகிறார் என கூறிகிறார்கள். அப்போது நான் கூறிய கருத்தை சில அரசியல்வாதிகள் பயன்படுத்திக் கொண்டார்கள். சில ரசிகர்களுக்கு எனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்துவதற்காக என் ஆதரவு இருப்பதாக கூறிக் கொண்டு வருபவர்களை நம்ப வேண்டாம் என ஒவ்வொரு முறையும் கூற வேண்டியுள்ளது.

அதை வைத்து சிலர் பணமும் பார்த்தார்கள். இதனால் சிலர் எனக்கு கடிதமும் எழுதினார்கள். எம்பி, எம்எல்ஏ ஆகி ஆசைப்படுவதில் தவறில்லை. ஆனால் அதை வைத்து பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை என்ன சொல்வது. என் வாழ்க்கை அந்த ஆண்டவன் கையில் உள்ளது. இப்போது நடிகனான என்னை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். நடிகனான நடிக்கிறேன். நாளை நான் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் எந்த பொறுப்பை கொடுத்தாலும் உண்மையாக, நேர்மையாக செய்வேன்.

ஒருவேலை நான் அரசியலுக்கு வர வேண்டிய சூழ்நிலை வந்தால், பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை பக்கத்தில் கூட சேர்க்க மாட்டேன். அதனால் குடும்பத்தை, பிள்ளைகளை பாருங்கள். குடிபழக்கம், புகைப்பழக்கத்தை விடுங்கள். அது உடல்நலத்தை மட்டுமல்ல மனநிலையையும் பாதித்து தவறான முடிவுகளை எடுக்க வைத்து, வாழ்க்கையை அழித்து விடும்.

இவ்வாறு ரஜினி பேசினார்.

 

Rate this item
(0 votes)