ஃபேஸ்புக்கில் பதிவு: திரைப்பட தயாரிப்பாளர் தற்கொலை

By இந்நேரம் May 15, 2017

புனே(15 மே 2017): மராத்திய திரைப்பட தயாரிப்பாளர் அதுல் தப்கிர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

டோல் தசா என்ற படத்தை தயாரித்த அதுல் தப்கிர் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தார். அவர் இரண்டு நாட்களாக அவர் அறையில் இருந்து வெளியே வராததால் ஓட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் ஓட்டல் அறையை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். அப்போது அறைக்குள் அதுல் தப்கிர் இறந்து கிடந்திருக்கிறார். உடனே போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இந்நிலையில் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் தயாரித்த படம் தோல்வியை சந்தித்ததாலும் அதனை தொடர்ந்து பல்வேறு சோதனைகளை சந்தித்ததாகவும் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளதாக பதிவொன்றை இட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

Atul B Tapkir, co-producer of Marathi film 'Dhol Tashe', was found dead in the room of a luxury hotel in Pune on Sunday. Police suspect it to be suicide as Tapkir (35) had written a Facebook post, suggesting frustration over domestic and financial problems.

Rate this item
(0 votes)