இணையதளம் - சினிமா விமர்சனம்!

Friday, 19 May 2017 12:47 Written by  இந்நேரம் Published in சினிமா

இணையதளம் இக்கால கட்டத்தில் இன்றியமையாத ஒன்றாகிவிட்ட நிலையில் அதன் தலைப்பில் வந்துள்ள படம் என்ன சொல்ல வருகிறது?

கதையின் ஹீரோ கணேஷ் வெங்கட் ராமன் ஒரு போலிஸ் உயர் அதிகாரி. அடைமழை நேரத்தில் ATM மையத்தில் பணம் எடுக்கும் போது ஒரு மர்ம கும்பல் சிறுவனின் உதவியுடன் பணத்தை கொள்ளை அடிக்க முயற்சிக்கிறது.

ஸ்வேதா மேனன் உளவுத்துறை அதிகாரியாக வேலை செய்கிறார். இவருக்கு உதவியாக ஈரோடு மகேஷ் பணிபுரிகிறார். வேலை இல்லாமல் இருப்பது போல ஃபீல் பண்ணும் மகேஷிற்கு ஒருநாள் ஒரு போன் தகவல் வருகிறது.

நடிகை சுகன்யா தன் கணவன் மற்றும் மகனை இழந்தவர். ஒரு கட்டத்தில் இவர் மூலம் ஸ்வேதாவுக்கு ஒரு பெரும் ஆபத்து வருகிறது.

ஆன்லைன் வழியே டெல்லி கணேஷ் கொலை செய்யப்படுவதை நேரலையாக வெளியிடுகிறார்கள். போலிஸ் எப்படியோ காப்பாற்றிவிட முயற்சி செய்கிறார்கள். ஆனால் அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. காப்பாற்றவும் முடியவில்லை.

இந்த கொலையில் அடுத்து சிக்குவது காமெடியனாக நடித்திருக்கும் ஆடம்ஸ். இவர் பத்திரிக்கை நிரூபராக நடித்திருக்கிறார். கடைசியில் மகேஷ் அந்த கொலை வேட்டையில் சிக்க உயிர் தப்பினாரா? இந்த சதியின் பின்னால் யார் இருக்கிறார்.

இவர்களை கொல்ல காரணம் என்ன? இறந்தவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது தான் மீதி கதை.

ஹீரோ கணேஷ் போலிஸ் அதிகாரியாக நடித்திருக்கலாம். ஆனால் கொஞ்சம் ஓவராக நடித்திருக்கிறாரோ என சில இடங்களில் தோன்றுகிறது. இடத்திற்கு ஏற்றவாறு நடிப்பதில் கொஞ்சம் கவனம் செலுத்தலாமே.

ஈரோடு மகேஷ் காமெடி நடிகரா, இல்லை துணை நடிகரா என சில கேள்வி எழுகிறது, ஸ்டாண்ட் அப் காமெடியும் செய்கிறார். பாஸ்க்காக தன் வேலையை விட்டுவிட்டாலும், கொலைகார வில்லனை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டுவது குட்.

மிருகத்தனமாக கொலை என கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் படத்தில் இயந்திரத்தனமான கொலை. படத்தில் நடக்கும் கொலை சம்பவங்களை பார்த்தால் சில ரியாலிட்டி ஷோக்களின் ஃபிளாஷ் வந்து போகிறது.

பஞ்சாபி கேஷனாக ஒரு சில சீனில் மட்டும் டெல்லி கணேஷ் வந்து போனாலும் ஒட்டு மொத்த பார்வையும் இவர் மீது திரும்புகிறது. படத்தில் ஒரு சில பாடல்கள் மட்டும் என்றாலும் பாடல்கள் அரோல் கரோலி இசையில் ஓகே.

சுமார் தளம்

-தல தளபதி

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.