சங்கிலி புங்கிலி கதவ தொற - சினிமா விமர்சனம்!

Friday, 19 May 2017 19:11 Written by  இந்நேரம் Published in சினிமா

சமீபகாலமாக தொடர் தோல்வியை சந்தித்து வரும் ஜீவாவுக்கு சங்கிலி புங்கிலி கதவ தொற கைகொடுக்குமா?

ஜீவா அவரின் அம்மா சொந்த வீடு இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகின்றனர். தன் மாமாவின் வீட்டில் தான் ஜீவா பல வருடமாக இருக்கின்றார்.

ஊருக்கு வெளியே இருக்கும் பங்களாவை வாங்க வேண்டும் என்று ஜீவா விரும்ப, ஒரு சில தடைகளை தாண்டி அந்த வீடு ஜீவா கைக்கு வருகிறது.

ஆனால், அந்த வீடு எங்களுக்கு சொந்தம் என தம்பி ராமையா பேமிலியும் வர, அதை தொடர்ந்து சில அமானுஷிய நிகழ்வுகள் வீட்டில் நடக்கின்றது.

பிறகு, அந்த வீடு யாருக்கு கிடைத்தது, அந்த வீட்டில் இருக்கும் அமானுஷியம் என்ன என்பதே மீதிக்கதை.

ஜீவா சில நாட்களாகவே தனக்கு என்ன வரும், ரசிகர்களுக்கு தன்னிடம் என்ன பிடிக்கும் என்பதையே மறந்து சுற்றி வந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது மீண்டும் தன் ரூட்டிற்கு வந்துவிட்டார். இதுவரை சந்தானத்துடன் கூட்டணி அமைத்த இவர் தற்போது சூரியுடன் களத்தில் இறங்கியுள்ளார்.

சூரியும் அதகளம் செய்துள்ளார், ஜீவாவின் மாமா பெண்ணையே காதலிக்கும் கதாபாத்திரம். பேய் இருக்கும் பங்களாவில் இவர் செய்யும் அட்டகாசம், அதிலும் குறிப்பாக சிறுவனாக வரும் பேயுடன் இவர் விளையாடும் காட்சி எல்லாம் சிரிப்பிற்கு கேரண்டி. ஸ்ரீதிவ்யா இதுவரை தான் நடித்த படங்களில் என்ன செய்தாரோ, அதே தான் இதிலும், நடிக்க பெரிய ஸ்கோப் இல்லை.

தம்பி ராமையா, தேவதர்ஷினி, மதுமிதா, ராதிகா, ராதா ரவி என்று எப்போதுமே ஒரு ப்ரேமிற்குள் குறைந்தது 4 பேராவது இருந்து வருகின்றனர். படத்தின் முதல் பாதி செம்ம கலகலப்பாக செல்ல, இரண்டாம் பாதி கொஞ்சம் தடுமாறுகின்றது.

ஆனால், மொத்தத்திற்கும் சேர்த்து கிளைமேக்ஸில் செய்கிறார்கள் ஒரு கலாட்டா. தொடர்ந்து 20 நிமிடத்திற்கு மேல் சிரிப்பு சரவெடி தான், பட்ஜெட் பத்மநாதன் படத்தையும் தில்லுக்கு துட்டு படத்தையும் சேர்த்து மிக்ஸியில் அடித்தால் சங்கிலி புங்கிலி கதவ தொற.

சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு பாதி நேரம் இருட்டில் இருந்தாலும் தெளிவாக காட்சிகளை படம்பிடித்து காட்டுகின்றது. விஷால் சந்திரசேகர் பாடல்கள் வரும் போதெல்லாம் தியேட்டர் கேண்டின் புல் ஆகும், அதே நேரம் பின்னணியில் கலக்கியுள்ளார்.

நகைச்சுவை விருந்து

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.