மன்மோகன்சிங் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது!

By இந்நேரம் June 08, 2017

புதுடெல்லி(08 ஜூன் 2017): காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது.

2006-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை பத்தாண்டுகள் இந்திய பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங், பிரதமராக தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக, அவரது ஊடக ஆலோசகரான சஞ்சய் பாரு எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் ‘தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்” என்ற பெயரில் திரைப்படம் உருவாக உள்ளது.

இப்படத்தில் இயக்குநர் அனுபம் கெர் மன்மோகன் சிங் வேடத்தில் நடிக்க இருக்கிறார். தனது டிவிட்டர் செய்தியில் இதை தெரிவித்துள்ள அனுபம் கெர், "தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்" என்ற திரைப்படத்தில் மன்மோகன் சிங் வேடத்தில் நடிக்க ஆவலுடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Bollywood actor Anupam Kher will play former Indian Prime Minister Manmohan Singh in a new film.

Rate this item
(0 votes)