பிரபல நடிகை மர்ம மரணம்!

Tuesday, 13 June 2017 14:15 Written by  இந்நேரம் Published in சினிமா

மும்பை(13 ஜூன் 2017): பிரபல நடிகை கீர்த்திகா சவுத்ரி(27) மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

 மும்பையை சேர்ந்தவர் கீர்த்திகா சவுத்ரி (வயது 23) டிவி தொடர் நடிகையாகவும் சினிமாவிலும் நடித்து வந்தார். கிர்த்திகா மும்பையில் உள்ள அந்தேரியில் ஒரு அப்பார்ட்மெண்டில் குடியிருந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவர் வசித்துவந்த வீடு சில நாட்களாக பூட்டி கிடந்தது. அந்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு புகார் அளித்தனர்.

இதை தொடர்ந்து போலீசார் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு நடிகை கிர்த்திகா உடல் மிகவும் அழுகிய நிலையில் இருந்தது. ரூமில் ஏசி ஓடிக்கொண்டிருந்ததாக் துர்நாற்றம் வெளியில் வராமல் இருந்துள்ளது.

இதுகுறித்து வழக்கு பதிவுசெய்து பிரேதத்தை கைபற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அவர் கொலை செய்யப்பட்டார அல்லது வேறு விதமாக மரணமடைந்தாரா என்று காவல்துறையினர் விசரணை மேற்கொண்டு வருகின்றனர்.

A struggling actress was found dead in her apartment in Mumbai's Andheri suburb yesterday. Kritika Choudhary's decomposed body was found by the police after neighbours reported a stench from her home.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.