தன்னை விளம்பரப்படுத்த கண்டதையும் எழுதும் கஸ்தூரி!

By இந்நேரம் June 15, 2017

சென்னை(15 ஜூன் 2017): நடிகை கஸ்தூரி ட்விட்டரில் தன்னை விளம்பரப்படுத்துவதற்காக கண்டதையும் எழுதி குழப்பி வருகிறார்.

சமீபத்தில் நேர்கணல்கள் மூலம் சர்ச்சையான கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வந்த நடிகை கஸ்தூரி அவரது ட்விட்டர் பக்கத்தில் "பெரும் தொழிலதிபர் லட்சுமி மிட்டலுக்கும், அதேபோல அரசியல் தலைவர் டி.ஆர்.பாலுவுக்கும் கஸ்தூரிக்கும் என்ன தொடர்பு?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு அவரே பதிலளிக்கையில் தொழிலதிபர் லட்சுமி மிட்டலுக்கும், அதேபோல அரசியல் தலைவர் டி.ஆர்.பாலுவுக்கும் கஸ்தூரிக்கும் ஒரே நாளில் பிறந்த நாள் என்று கூறியுள்ளார்.

இதுபோன்ற டிவிட்கள் மூலம் அவரை பிரபலப் படுத்த நினைக்கிறார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Rate this item
(0 votes)