நடிகை அஞ்சலி ஶ்ரீவஸ்தவா தற்கொலை!

By இந்நேரம் June 19, 2017

மும்பை(19 ஜூன் 2017): நடிகை அஞ்சலி ஶ்ரீவஸ்தவா அவரது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

போஜ்பூரி படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகை அஞ்சலி ஶ்ரீவஸ்தவா இவர் மும்பையில் உள்ள அபார்ட்மெண்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மும்பையில் தனியாக வாழ்ந்துவந்த நடிகை அஞ்சலி ஶ்ரீவஸ்தவா பலமுறை அவருடைய செல்போன் அழைப்புக்கு பதில் கிடைக்காததை அடுத்து அவரது அப்பார்ட்மெண்டை மாஸ்டர் சாவி மூலம் திறந்து பார்த்தபோது தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்துள்ளது.

எனினும் தற்கொலைக்கான காரணம் குறித்து அவர் எழுதுவும் எழுதி வைக்கவில்லை என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

உடலை கைபற்றிய காவல்துறையினர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Bhojpuri actress Anjali Srivastava has allegedly committed suicide at her apartment in Mumbai’s Juhu suburb on Monday.

Rate this item
(0 votes)