நடிகர் கமல்ஹாசன் வீட்டில் திடீர் போலீஸ் குவிப்பு!

By இந்நேரம் July 14, 2017

சென்னை(14 ஜூலை 2017): இந்து அமைப்புக்கள் நடிகர் கமலஹாசனின் வீட்டை முற்றுகையிட திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து அவரது வீட்டில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். இதில் பங்கேற்கும் நடிகர், நடிகைகள் ஆபாசமாக பேசுவதாகவும், சமூக சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாகவும் கூறி நிகழ்ச்சியைத் தடை செய்ய இந்து அமைப்புக்கள் வலியுறுத்தி வருகின்றன.

இதுபோன்ற குற்றச்சாட்டுக்களுக்கு விளக்கமளிக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறி புகார் கொடுத்த இந்து அமைப்புக்களை நடிகர் கமல் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது கடுமையாக சாடினார். இந்த நிலையில், நடிகர் கமலின் வீட்டை இந்து அமைப்பினர் முற்றுகையிடப் போவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சென்னை ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள கமலின் வீட்டுக்கு முன்புறமும், எல்டாம்ஸ் சாலையிலும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Rate this item
(0 votes)