ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய ரசிகர்கள்!

By இந்நேரம் July 14, 2017

லண்டன்(14 ஜூலை 2017): வெம்பிளியில் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய இசை நிகழ்ச்சியில் இந்தி பாடல்கள் குறைவாக பாடப்பட்டதால் ரசிகர்கள் அதிருப்தியில் வெளியேறியதாக கூறப்படுகிறது.

கடந்த ஜூலை 8 ஆம் தேதி ஏ.ஆர்.ரஹ்மான் இங்கிலாந்தின் வெம்பிளியில் 'நேற்று இன்று நாளை' என்ற பெயரில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார். அதில் அதிகமான தமிழ் பாடல்களே பாடப்பட்டுள்ளன. ஒரு சில இந்தி பாடல்கள் மட்டும் பாடியதாக தெரிகிறது.

இந்நிலையில் இந்தி பாடல்கள் அதிகம் எதிர்பார்த்து வந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்ததாக கூறப்படுகிறது. இதனால் சிலர் நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேறியதாக தெரிகிறது.

மேலும் ரசிகர்கள் பலர் தங்களது அதிருப்தியை சமூக வலைதளங்களில் கருத்தாக தெரிவித்து வருகின்றனர்.

Complaining that "most of the songs were in Tamil", many Hindi speakers reportedly walked out of the ARR concert in Wembley.

Rate this item
(0 votes)