மகள் மதம் மாறியதற்காக கமல் வாழ்த்து!

Friday, 28 July 2017 17:23 Written by  இந்நேரம் Published in சினிமா

சென்னை(28 ஜூலை 2017): நடிகர் கமல் மகள் நடிகை அக்‌ஷரா புத்த மதத்திற்கு மாறியுள்ளதாக தெரிவித்துள்ள நிலையில் அவருக்கு கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜித்துடன் விவேகம் படத்தில் நடித்துள்ள அக்‌ஷரா நிகழ்ச்சியொன்றில் பேசியபோது புத்த மதத்திற்கு மாறியுள்ளதாக தெரிவித்தார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “முதலில் நாத்திகராக இருந்தேன். இப்போது புத்த மதத்திற்கு மாறிவிட்டேன். எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் கடவுளை நேசிப்பவர்களை எப்போதும் மதிப்பேன். எனக்கு புத்த மதம் பிடிக்கும். அது வாழ்வியலோடு கலந்தது. அதில் நிறைய விஷயங்களைக் கற்றுவருவதால் என்னை இணைத்துக் கொண்டேன்” எனத் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் மகள் அக்‌ஷரா ஹாசனுக்கு கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார், இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், 'Hi. Akshu. Have you changed your religeon? Love you, even if you have. Love unlike religeon is unconditional. Enjoy life . Love- Your Bapu என்று தெரிவித்துள்ளார்.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.