நடிகை பாவனா கடத்தல் வழக்கின் விசாரணை வளையத்தில் இன்னொரு நடிகை!

Saturday, 29 July 2017 10:41 Written by  இந்நேரம் Published in சினிமா

திருவனந்தபுரம்(29 ஜூலை 2017): நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் நடிகையும் பாடகியுமான ரிமி டாமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பிரபல நடிகை பாவனா கடத்தப்பட்டு, காரிலேயே வன்கொடுமைக்கு ஆளானார். தமிழ் மற்றும் மலையாளத்தில் கிட்டத்தட்ட 75 படங்களுக்கும் மேல் நடித்தவர் அவர். ஒட்டுமொத்த கேரளத் திரையுலகமும் பெண் கொடுமைக்கு எதிராகப் போராடியது.
மேலும் இந்த கடத்தல் தொடர்பில் திடீர் திருப்பமாக பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பிரபல பாடகியும் நடிகையுமான ரிமி டாமியிடமும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடந்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள நடிகை ரிமி டாமி, ‘எனக்கும் திலீப்புக்கும் எந்தவித பணப் பரிவர்த்தனைகளும் கிடையாது. விசாரணையின்போது, அவர் ஒரு மேடத்துக்கும் தனக்கும் தொடர்பு இருப்பதாகச் சொன்னதாகச் சொல்கிறார்கள். அவர் சொன்ன அந்த ‘மேடம்’ நான் இல்லை. பைஜு பவுலோஸ் என்னும் காவல்அதிகாரிதான் இது தொடர்பாக முதன் முதலில் என்னிடம் பேசினார்.

நான் வெளிநாடு சென்றிருக்கிறேன். நான் ஒரு பாடகி. நிறைய ஸ்டேஜ் ஷோக்கள் நடத்துவதற்காக வெளிநாடு சென்ற அனுபவம் எனக்கு உண்டு. அதைச் சொன்னேன். மற்றபடி என்னை போலீஸார் சந்தேகிக்கவில்லை. இது ஒரு விசாரணைதான். மேலும், நடிகர் திலீப் எனக்கு நண்பர்தான். ஆனால், அவருக்கும் எனக்கும் எந்தப் பணப்பரிவர்த்தனையும் இல்லை. வேண்டுமானால், வருமான வரித் துறை இதைக் கண்டுபிடிக்கட்டும்.

எனக்கும் அந்த நடிகைக்கும் எந்தமுன் விரோதமும் கிடையாது. சொல்லப்போனால், இந்தப் பிரச்னை நடந்தவுடனேயே அவருக்கு தொலைபேசி மூலம் ஆறுதல் மெசேஜ் கூட அனுப்பியிருக்கிறேன். அந்த நடிகையின் நெருங்கிய தோழியான ரம்யா நம்பீசன் எனக்கும் நெருங்கிய தோழி. வேண்டுமானால், ரம்யாவிடம்கூட நீங்கள் கேட்டுப் பாருங்கள். காவ்யாவிடமும் இது பற்றிப் பேசியிருக்கிறேன். ஊடகங்கள்தான் எனக்கும் இந்த வழக்குக்கும் சம்பந்தம் இருப்பதாகத் திரித்து எழுதுகின்றன. இதுதான் எனக்கு மிகவும் மனஉளைச்சலைத் தருகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.