விஜய் நடிக்கும் மெர்சல் படத்திற்கு தடை!

By இந்நேரம் September 22, 2017

சென்னை(22 செப் 2017): விஜய் நடிக்கும் மெர்சல் படத்திற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'மெர்சல்' திரைப்படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக இருக்கிறது. ஆனால் இந்த படத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏ.ஆர் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் ராஜேந்திரன் என்பவர் மனு தாக்கல் செய்தார். தங்களது படத்தின் டைட்டிலைப் போன்றே வைக்கப்பட்டிருக்கும் 'மெர்சல்' டைட்டிலால் தங்களது படத்திற்கு பாதிப்பு ஏற்படும் என அந்த மனுவில் கூறப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் பல கோடி ரூபாய் செலவு செய்து தற்போது மெர்சல் படத்துக்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளதால் படத்திற்கு தடை விதிக்கக்கூடாது என தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர்நீதிமன்ற நீதிபதி இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறார்.

Rate this item
(0 votes)