நடிகர் தாடி பாலாஜி மனைவி நித்யா மீது திடுக் புகார்!

By இந்நேரம் October 11, 2017

சென்னை(11 அக் 2017): நடிகர் தாடி பாலாஜி அவரது மனைவி நித்யாவுக்கு வேறொருவருடன் கள்ளத் தொடர்பு இருந்ததாக போலீஸில் புகார் அளித்துள்ளார்.

விஜய் டிவி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் நடுவரும் இன்னும் சில படங்களில் நடித்தவருமான நடிகர் தாடி பாலாஜி. அவரது மனைவி நித்யா மற்றும் மகள் போஷிகாவுடன் மாதவரம் அருகே உள்ள பூம்புகார் நகரில் வசித்து வருகிறார். நடன கலைஞரான நித்யாவை, தாடி பாலாஜி பல மாதங்களாக காதலித்து திருமணம் செய்தார். நித்யா நடன கலைஞர் என்பதால் அவர் மூலம்தான் தாடி பாலாஜிக்கு திரைப்படங்களில் வாய்ப்பு அதிகளில் கிடைத்தது. இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன் நித்யா போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில் தனது கணவர் தாடி பாலாஜி குடித்துவிட்டு கடுமையாக அடிப்பதாகவும், முதல் திருமணத்தை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும், சாதி பெயரை கூறி பெற்றோரையும் தன்னையும் மிகவும் கேவலமாக பேசுவதாகவும் புகார் அளித்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, நித்யா அளித்த புகாரின்படி மாதவரம் போலீசார் தாடி பாலாஜி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடைேய தாடி பாலாஜி கடந்த மாதம் 27ம் தேதி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தாடி பாலாஜி மனைவி மீது பரபரப்பு குற்றம் சாட்டினார். அந்த புகாரில், கடந்த பிப்ரவரி மாதம் என் மனைவிக்கும் தமிழக மின்சார வாரியத்தில் வேலை செய்யும் பைசல் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததை நான் கண்டுபிடித்ததால் எங்களுக்குள் பிளவு ஏற்பட்டு நாங்கள் இருவரும் கடந்த 4 மாதங்களாக பிரிந்து இருக்கிறோம்.இதற்கிடையே எனக்கு தெரிந்த நண்பரும் தமிழக காவல்துறை மாநில குற்ற ஆவண காப்பகத்தில் வேலை செய்யும் மனோஜ்குமார் மூலம் எங்கள் பிரச்னைக்கு உதவி கேட்டேன்.

அதற்கு மனோஜ்குமாரும் எனக்கு உதவுவதாக நடித்து, என் மனைவிடம் கள்ளதொடர்பு கொண்ட பைசல் என்பவரின் செல்போனில் என் மனைவியும், பைசலும் நெருக்கமாக உள்ள புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் விட்டு விடுவேன் என் மிரட்டி வருகிறார்.
எனவே, எஸ்ஐ மனோஜ் குமார், மனைவி நித்யாவுடன் கள்ளதொடர்பு வைத்திருக்கும் பைசல் என்பவர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார்.

இந்த வழக்கு போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. அதைதொடர்ந்து இன்ஸ்பெக்டர் அமலா ரத்தினம் இருவரும் விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பினார். நடிகர் தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா ஆகியோர் நேற்று மாலை வில்லிவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜராகினார். அதைதொடர்ந்து, இருவரிடமும் இன்ஸ்பெக்டர் அமலா ரத்தினம் விசாரணை நடத்தினார். அப்போது இருவரும் ஒருவர் மீது ஒருவர் கடுமையாக குற்றம் சாட்டி காவல் நிலையத்திலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இன்ஸ்ெபக்டர் இருவரையும் தனித்தனியாக அழைத்து எழுத்து மூலம் அவர்களது வாக்கு மூலத்தை வாங்கி கொண்டார். .

Rate this item
(0 votes)