கமலுக்கு டெங்கு காய்ச்சலா?

Wednesday, 11 October 2017 22:06 Written by  இந்நேரம் Published in சினிமா

சென்னை(11 அக் 2017): நடிகர் கமலுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதாக வதந்தி பரவி வருகிறது.

நடிகர் கமல் செவ்வாயன்று திரைப்பட ஆவண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள இருந்தது. மேலும் அவரை பேட்டி காண பல ஊடகங்கள் காத்திருந்தன. ஆனால் எதிர்பாராத விதமாக அவர் வரயியலவில்லை. மேலும் கமல் ஹாசனுக்கு டெங்கு காய்ச்சல் என சில தகவல்கள் பரவியது.

உடனே செய்தியாளர்கள் சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள கமல் அலுவலகத்தில் கூடினர். ஆனால் உண்மையில் அவருக்கு நேற்று முன் தினம் இரவு திடீரென காய்ச்சலும் இருமலும் ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனை செய்ததில் அவருக்கு வைரஸ் காய்ச்சல் என்றும் தொண்டையில் புண் இருப்பதால் நிகழ்ச்சிகளில் பேச இயலாது என்பதால் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை தவிர்த்துள்ளார்.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.