திரைப்பட ஒளிப்பதிவாளர் பிரியன் மாரடைப்பால் மரணம்!

Thursday, 09 November 2017 22:35 Written by  இந்நேரம் Published in சினிமா

சென்னை(09 நவ 2017): பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளர் பிரியன் மாரடைப்பால் மரணமடைந்தார்.

பொற்காலம்' படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு ஒளிப்பதிவாளராக அறிமுகமான பிரியன், 'ஆனந்த பூங்காற்றே', 'மஜ்னு', 'வல்லவன்', 'ஆறு' எனப் பல படங்களில் ஒளிப்பதிவாளராக வேலை பார்த்திருக்கிறார். மேலும், ஹரியின் 'சிங்கம்' படத்தின் மூன்று பாகத்துக்கும் ஒளிப்பதிவாளராகயிருந்தவர் பிரியன்.

இந்நிலையில் மாரடைப்பு காரணமாக ஒளிப்பதிவாளர் பிரியன் காலமானார். இவரது இறப்புக்குத் தமிழ் சினிமாவில் இருக்கும் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் வேளையில், பிரியனின் உடல் அவரது சொந்த ஊரான விருதுநகருக்கு எடுத்துச்செல்லப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிரியன் சாமி 2 பத்திற்கும் ஒப்பந்தமாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.