நெஞ்சில் துணிவிருந்தால் - திரைப்பட விமர்சனம்!

Saturday, 11 November 2017 10:57 Written by  இந்நேரம் Published in சினிமா

இயக்குநர் சுசீந்திரனுக்கு தமிழ் திரையுலகில் தனி இடம் உண்டு. அவரது இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் நெஞ்சில் துணிவிருந்தால்.

படத்தின் ஹீரோவான சந்தீப் கிஷன் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் எதிர்பாராத விதமாக அப்பாவை இழக்கிறார். இவருக்கு சூரி, விக்ராந்த் என நான்கு நண்பர்கள். ஒரே இடத்தில் வேலை செய்யும் இவர்கள் ஒன்றாக கூடினால் எண்டர்டெயின்மெண்ட் தான்.

தங்கை மற்றும் அம்மாவுடன் இருக்கும் சந்தீப் கிஷன் ஒருநாள் எதிர்பாராத விதமாக ஹீரோயின் மெஹ்ரினை சந்திக்கிறார். திடீரென ஒரு ஆட்டோ டிரைவர் செல்போன் டவரில் ஏறி தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்துவிடுகிறார். இந்த சூழ்நிலையில் மீண்டும் அவர்கள் சந்திக்க காதல் துளிர்விடுகிறது.

டாக்டருக்கு படிக்கும் தன் தங்கை தன் நண்பரான விக்ராந்த்தை காதலிக்கும் விசயம் தெரியவர வீட்டில் பிரச்சனைகள் வெடிக்கிறது. அதே நேரத்தில் வில்லனான ஹரீஷ் உத்தமன் கையில் விக்ராந்த் சிக்குகிறார். இவரை குறிவைத்து அவரது கும்பல் சுற்றிவருகிறது.

இந்த விசயம் தனக்கு தெரியவர அதிர்ச்சியாகிறார் ஹீரோ. ஒரு கட்டத்தில் இவருக்கும் அவரின் தங்கை உயிருக்கும் பெரும் ஆபத்து சூழ்கிறது. தங்கையை காப்பாற்றினாரா, நண்பன் விக்ராந்த் ஆபத்தில் இருந்து தப்பித்தாரா, எதற்காக வில்லன் இவர்களை குறிவைக்கிறார்கள் என்பது தான் கதை.

ஹீரோ சந்தீப் கிஷன் ஒரு ஜாலியான டைப். பல தெலுங்கு படங்களில் நடித்தவர். யாருடா மகேஷ், மாநகரம் படத்திற்கு பிறகு தற்போது இப்படத்தில் இறங்கியுள்ளார். கேஷுவல் ஹீரோ போல இருக்கும் இவர் இப்படத்தில் ஓகே. இன்னும் கொஞ்சம் சீரியஸ் ஆகியிருக்கலாமோ என தோன்றுகிறது.

சுசீந்திரன் ஏற்கனவே சொன்னது போல அவரது வழக்கமான படங்களை போல இல்லாமல், இப்படத்தில் ஹீரோயினுக்கு ஒரு சின்ன ரோல் தான். ஆனாலும் ஹீரோயின் வரும் காட்சிகள் படத்திற்கு கொஞ்சம் அழகை கூட்டுகிறது. அதிலும் காலேஜில் இவர் செய்யும் லூட்டி ரசனை.

ஹரீஷ் உத்தமன் இப்படத்திலும் தனது திறமையை காட்டியுள்ளார். பிளான் போட்டு வேலை செய்யும் இவருக்கே கடைசியில் ஸ்கெட்ச் போட்டுவிடுவது கொஞ்சம் ட்விஸ்ட்.

காமெடிக்கு சூரி, அப்புக்குட்டி என இருவர் இருந்தாலும் சூரி தான் முன்னணியில் இருக்கிறார். வழக்கமான காமெடிகள் தான். நடிகர் விக்ராந்த் சொல்லவே வேண்டாம். ஏற்கனவே நடிப்பு திறமைக்கு பாராட்டை பெற்றவர். இப்படத்திலும் அதே போல ஸ்கோர் அள்ளுகிறார்.

சசீந்திரனிடம் எதிர்பார்க்கும் பல விசயங்கள் அவரது இப்படத்தில் மிஸ்ஸிங்.

- தல தளபதி


Nenjil Thunivirunthal movie review: This Sundeep Kishan movie is an average thriller

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.