கத்தி சொல்லும் அறம்!

Sunday, 12 November 2017 10:11 Written by  இந்நேரம் Published in சினிமா

கோபி நாயனார் இயக்கத்தில் நயன்தாராவின் வித்தியாசமான நடிப்பில் வெளிகியுள்ள படம் அறம். படம் முழுவதும் கதைக்கு ஏற்ப நயன்தாரா தன்னுடைய நடிப்பில் அசத்தியுள்ளார். ஒவ்வொரு காட்சியும், அவர் பேசும் வசனங்களும், திரைக்கதையும் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

தற்போது அறம் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் சுசீந்திரன் நயன்தாரா மற்றும் படக்குழுவை பாராட்டி தள்ளியுள்ளார்."நயன்தாராவிற்கு இது lifetime கேரக்டர் - அதை உணர்ந்து அவர் நடித்துள்ளார். கோபி - தமிழ் சினிமாவிற்கு கிடைத்த புத்துணர்ச்சி" என அவர் பாராட்டியுள்ளார்.

அதேபோல திரை பிரபலங்கள் தவிர சமூக வலைதளங்களிலும் படத்தின் இயக்குநர் கோபி நாயனாரையும் அறம் படத்தையும் புகழ்ந்து தள்ளுகின்றனர்.

இந்நிலையில்தான் விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயகக்தில் வெளியான மெகா ஹிட் திரைப்படமான கத்தி படத்தின் கதை தன்னுடையது என்று கோபி நாயனார் நீதிமன்றம் ஏறியபோது அவருடைய நியாயம் எடுபடவில்லை என்ற குற்றச்சாட்டு அப்போது எழுந்தபோதும் அது நீரில் கரைந்துபோனது.

ஆனால் இப்போது அறம் படம் பார்த்தவர்கள் நம்புகின்றனர். அன்று கோபி நாயனார் கத்தியது யாருடைய செவிக்கும் கேட்கவில்லை. தனக்கு எதிராக அன்று மறுக்கப்பட்ட நீதியை இன்று ஆனால் கத்தி பேசாமல் அமைதியாக அறம் மூலம் நிலை நாட்டியுள்ளார் என்கின்றனர்.

-தல தளபதி

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.