2 O திரைப்படம் வெளியீட்டு தேதி அறிவிப்பு!

By இந்நேரம் December 03, 2017

சென்னை(03 டிச 2017): சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் தயாராகியுள்ள 2ஒ திரைப்படம் வெளியிடும் தேதியை லைக்கா புரொடக்‌ஷன்ஸ் அறிவித்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக, அதிக பொருட்செலவில் தயாராகி வரும் படம் '2.O'. ஷங்கர், ரஜினிகாந்த் மூன்றாவது முறையாக இணைந்து பணிபுரியும் இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நாயகியாக எமி ஜாக்சன் நடிக்கிறார்.

இந்நிலையில் இந்த திரைப்படம் வெளியாகும் தேதியை லைக்கா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "லைக்கா ப்ரொடக்ஷன்ஸ், ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், ஷங்கர் ஆகியோரின் சயின்ஸ் பிக்ஷன் ஆக்ஷன் த்ரில்லர் படமான 2.O படம் ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் திரையிடப்படும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் 25-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Rate this item
(0 votes)