தீய பழக்கத்தால் மரணம் வரை சென்று மீண்ட நடிகை!

By இந்நேரம் December 03, 2017

மும்பை(03 டிச 2017): புற்று நோய் பாதிப்பால் மரணம் வரை சென்று மீண்டுள்ளார் நடிகை மனீஷா கொய்ராலா.

இந்தியில் 1942 எ லவ் ஸ்டோரி என்ற படத்தின் மூலம் புகழ் பெற்றவர் நடிகை மனீஷா கொய்ராலா. பின்பு தமிழில் மணிரத்னம் இயக்கத்தில் பம்பாய் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். ராஜ வம்சத்தில் பிறந்தவர் என்ற பெயரும் அவருக்கு உண்டு.

இவருக்கு புகைப்பிடிக்கும் தீய பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனாலேயே கடந்த சில வருடங்களுக்கு முன்பு அவர் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப் பின் மீண்டுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,"புற்று நோய் வந்தால் அச்சப்பட வேண்டியதில்லை. அந்த நோய் நிவாரணம் பெறக்கூடிய நோய்தான். நான் மீண்டதுபோல் இந்நோய் பாதிப்படைந்தால் சரியான அளவில் சிகிச்சை பெற்று நோயிலிருந்து மீண்டு வரலாம்" என்றார்.

 

Rate this item
(0 votes)