கவர்ச்சி போட்டோவை பதிந்துவிட்டு அதற்கு நியாயம் கற்பிக்கும் நடிகை!

By இந்நேரம் December 04, 2017

சென்னை(04 டிச 2017): கவர்ச்சி போட்டோவை ட்விட்டரில் பதிந்ததோடு அதற்கு நியாயம் கற்பித்துள்ளார் நடிகை வித்யூ லேகா.

நீதானே என் பொன் வசந்தம் படத்தில் அறிமுகமானவர் நடிகை வித்யூ லேகா. காமெடி நடிகையாகவும், சப்போர்ட்டிங் நடிகையாகவும் நடித்து வருகிறார்.

மிகவும் குண்டாக இருந்த இவர் திடீரென உடல் இளைத்து சமீபத்தில் இவர் ட்விட்டரில் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து போட்டோ வெளியிட்டார்.

இதற்கு பல விமர்சனங்கள் வந்தது. பலர் ஒவ்வொரு விதமாக தங்கள் கருத்துகளை பகிர்ந்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக அவர் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

அதாவது ஹேட்டர்ஸின் விமர்சனங்களுக்கு விடாமல் பதிலளித்தால் அவர்களை அங்கீகரிப்பது போல ஆகிவிடும். அய்யோ பாவம் இந்த பசங்க. எந்த காரணமும் இல்லாம என்னோட ஆடை பற்றி முட்டாள் தனமா கமெண்ட் அடிக்கிறதுக்கு பதிலா வாழ்கை ஓட ஏதாவது செய்யுங்க என கூறியுள்ளார். (Soo tempting to reply to some haters but they will win if I acknowledge them. Aiyo.. paavam pasanga. Vazhkai oda yedachu pannunga instead of hating for no reason and commenting on my clothes narrow minded clowns.)

 

Rate this item
(0 votes)