பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் மரணம்!

By இந்நேரம் December 06, 2017

சென்னை(06 டிச 2017): பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஆதித்யன் மரணமடைந்தார்.

கிழக்கு செவக்கையிலே என்ற புகழ் பெற்ற மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த பல பாடல்களுக்கு சொந்தக்காரரான ஆதித்யன் சிறுநீரக கோளாறு காரணமாக ஹைதராபாத்தில் ஒருவாரமாக சிகிச்சை பெற்றுவந்தார், நேற்று மதியம் 11-மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 63. இவர் ‘அமரன்’, ‘சீவலப்பேரி பாண்டி’, ‘மாமன் மகள்’, ‘அருவாவேலு’, ‘வணணக் கனவுகள்’, ‘சூப்பர் குடும்பம்‘, ‘அசுரன்’, ‘கோவில்பட்டி வீரலட்சுமி’ உள்பட 25-க்கும் மேற்பட்ட தமிழ் படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

இதை தவிர தெலுங்கு, மலையாள படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். ஏராளமான ரீமிக்ஸ் பாடல்களையும், பாப் பாடல் களையும் பாடி இருக்கிறார். இசை அமைப்பாளர் டி.இமான் இவரிடம் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்ப்பட உலகில், 90 களில் இளையராஜா, ஏ ஆர் ரகுமான், தேவா, வரிசையில் இசை அமைப்பாளராக இருந்தவர் ஆதித்யன். இவரது இயற்பெயர் டைட்டஸ். மனைவி பெயர் ஷோபியா. இந்த தம்பதியருக்கு ‌ஷாரோன், பிரார்த்தனா என்ற 2 மகள்கள் உள்ளனர்.
அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது. இருவரும் ஐதராபாத்தில் வசித்து வருகிறார்கள்.

அவரது உடல் இன்று ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. இன்று மாலை இறுதி சடங்கு நடைபெறுகிறது. இசை அமைப்பாளர் ஆதித்யன் மறைவுக்கு திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Rate this item
(0 votes)