ரஜினி ரசிகர் மன்றம் பெயர் மாற்றம்!

Saturday, 06 January 2018 14:07 Written by  இந்நேரம் Published in சினிமா

சென்னை(06 ஜன 2017): ரஜினியிம் அரசியல் பிரவேச அறிவிப்பை தொடர்ந்து ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் தனிக்கட்சி தொடங்கி வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் போட்டியிட போவதாகவும் அறிவித்தார். அவரது அரசியல் பிரவேச அறிவிப்புக்கு வரவேற்பும் எதிர்ப்பும் ஒரு சேர எழுந்தது.

இந்நிலையில் அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் என்ற பெயரில் இயங்கி வந்த தனது ரசிகர் மன்றத்தின் பெயரை ரஜினி மக்கள் மன்றம் என்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது

அரசியல் கட்சிக்கான வேலைகள் நடந்து வரும் நிலையில் இணையதளத்தில் பெயரை ரஜினி மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.