நடிகர் சங்க கட்டிடம் கட்ட சரவணாஸ் ஸ்டோர்ஸ் உதவி!

Saturday, 06 January 2018 21:23 Written by  இந்நேரம் Published in சினிமா

கோலாலம்பூர்(06 ஜன 2018): நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு ரூ 2.5 கோடி சரவணாஸ் ஸ்டோர்ஸ் உதவியுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள 18 கிரவுண்டு காலி இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கலையரங்கம், சிறிய தியேட்டர், உடற்பயிற்சி கூடம், நடனம், நடிப்பு பயிற்சி கூடங்கள், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கான அறைகள் போன்றவை இங்கு அமைய உள்ளன.

இதற்காக மலேசியாவில் நடிகர்-நடிகைகளின் நட்சத்திர கலை விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இன்று (6-ந்தேதி) இந்த விழா நடக்கிறது. மலேசிய அரசுடன் இணைந்து தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை இந்த விழாவை நடத்துகிறது. இதில் நடிகர்-நடிகைகள் நடனம், நாடகம், பாடல், நகைச்சுவை நிகழ்ச்சிகள் போன்றவை நடக்க உள்ளன.

இந்நிலையில் நடிகர் சங்க கட்டடம் கட்ட ரூ 2.5 கோடி நிதியுதவியை சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் வழங்கி உள்ளது. மலேசியாவில் நடைபெறும் நட்சத்திர கலை நிகழ்ச்சியில், நிதியுதவியை ரஜினி மற்றும் கமல் பெற்றுக் கொண்டனர்.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.