சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளரை வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்!

Monday, 08 January 2018 15:05 Written by  இந்நேரம் Published in சினிமா

சென்னை(08 ஜன 2018): நடிகர் சங்க கட்டிட நிதியாக ரூ 2.5 கோடி அளித்த சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

நடிகர் சங்கத்திற்கு கட்டிடம் கட்ட நிதி திரட்ட மலேசியாவில் நடந்த கலைவிழாவில், சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணா அருள் ரூ 2.5 கோடியை கட்டிட நிதியாக அளித்தார்.

இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில், போயும் போயும் நடிகர் சங்க கட்டிடத்திற்கா நிதியளிக்க வேண்டும்? அதற்கு பதில் முதியோர் இல்லம், அல்லது அனாதை இல்லத்திற்கு நிதியாக கொடுத்திருக்கலாம். என்று வறுத்தெடுத்துவிட்டனர்.

இந்த கலை விழாவில், ரஜினிகாந்த், கமல் ஹாஸன், சத்யராஜ் உள்ளிட்ட 350 நடிகர், நடிகைகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.