ஏ.ஆர்.ரஹ்மானை அடுத்து கோல்டன் குளோப் விருது பெற்ற இன்னொரு தமிழர்!

Tuesday, 09 January 2018 13:17 Written by  இந்நேரம் Published in சினிமா

நியூயார்க்(09 ஜன 2018): இந்திய வம்சாவழியை சேர்ந்த அமெரிக்க வாழ் தமிழர் அஜீஸ் அன்சாரி என்ற நடிகருக்கு கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டுள்ளது.

ஆஸ்கர் விருதுக்கு அடுத்தபடியாக உலகின் பெருமைக்குரிய மிகப்பெரிய சினிமா விருதாக கோல்டன் குளோப் விருது கருதப்படுகிறது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள பெவெர்லி ஹில்ஸ் பகுதியில் உள்ள பெவெர்லி ஹில்டன் நட்சத்திர ஓட்டலில் 75-வது கோல்டன் குளோப் விருது வழங்கும் விழா நேற்றிரவு நடைபெற்றது.

பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்ட இந்த விருது நிகழ்ச்சியில் சிறந்த நகைச்சுவை அல்லது இசையம்சம் கொண்ட தொலைக்காட்சி தொடர் பிரிவில் ‘தி மாஸ்டர் ஆப் நன்’ (The Master Of None) தொடரில் நடித்த அஜீஸ் அன்சாரி என்பவருக்கு சிறந்த நடிகர் விருது அளிக்கப்பட்டது.

அஜீஸ் அன்சாரியின் மூதாதையர்கள் தமிழ்நாடு கன்னியா குமரி மாவட்டம் கோட்டாரை சேர்ந்தவர்கள். ஆனால் அஜீஸ் அன்சாரி அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். எனினும் அஜீசுக்கு தமிழும் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

கோல்டன் குளோப் விருது ஏற்கனவே இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் என்ற படத்திற்காக பெற்றுள்ளார்.

 

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.