சர்வதேச திரைப்பட விழாவில் ராமின் பேரன்பு திரைப்படம்!

Thursday, 11 January 2018 21:07 Written by  இந்நேரம் Published in சினிமா

நெதர்லாந்து(11 ஜன 2018): நெதர்லாந்தில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில் ராமின் பேரன்பு திரைப்படம் வெளியிடப்படவுள்ளது.

கற்றது தமிழ் மூலம் இயக்குநராக அறிமுகமான ராம் தங்க மீன்கள் படம் மூலம் சிறந்த இயக்குநர்கள் வரிசையில் இடம்பெற்றார். அவரது தரமணி திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் ராம் இயக்கத்தில் மம்முட்டி, சமுத்திரகனி, அஞ்சலி, திருநங்கை அஞ்சலி அமீர் என பலர் நடிப்பில் தயாராகியுள்ள படம் பேரன்பு. இதற்கு யுவன் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படம் நெதர்லாந்து நாட்டில் ராட்ரிடேம் சர்வதேச திரைப்பட விழா வரும் ஜனவரி 24 முதல் ஃபிப்ரவரி 4 ம் தேதி வரை நடைபெறவுள்ளது. 47 வது விழாவான இதில் அவரின் பேரன்பு படம் திரையிடப்படுகிறது.

படம் வெளியாகும் முன்பே பேரன்பு திரைப்படம் பல திரைப்பட விழாக்களில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.