ஸ்கெட்ச் - திரைப்பட விமர்சனம்!

Friday, 12 January 2018 12:15 Written by  இந்நேரம் Published in சினிமா

நடிகர் விக்ரமின் நடிப்பில் பொங்கல் வெளியீடாக மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கக்கூடிய படம் ஸ்கெட்ச்.

வட சென்னையில் வண்டிகளுக்கு பைனான்ஸ் கொடுக்கும் சேட்டு ஒருவரிடம் வேலை செய்கிறார் ஸ்கெட்ச் விக்ரம். விக்ரம் ஸ்கெட்ச் போட்டால் மிஸ் ஆகாது என கூறும் அளவுக்கு டியூ கட்டாதவர்களின் வண்டிகளை நண்பர்களோடு சேர்ந்து தூக்குவதில் அவர் கில்லாடி. ஐயர் வீட்டு பெண்ணான தமன்னாவை துரத்தி துரத்தி காதலிக்கிறார்.

காதல் ஒருபுறமிருக்க, எதிர் கேங் ஆர்.கே.சுரேஷுடன் அடிக்கடி சிறிய மோதல் நடக்கிறது. அதுமட்டுமின்றி பிரபல தாதாவான குமாரின் காரை திட்டம் போட்டு தூக்குகிறார் விக்ரம். அங்கு ஆரம்பிக்கிறது அவருக்கும் அவர் நண்பர்களுக்கும் பெரிய சிக்கல்.

அதற்கு யார் காரணம் என்பதை நம்மை யூகிக்க விடாமல், எதிர்பார்க்காத கிளைமாக்ஸுடன், மீதி கதையை காட்டியுள்ளார் இயக்குனர் விஜய் சந்தர்.

படத்திற்கு படம் தோற்றத்தில் வித்யாசம் காட்டும் விக்ரம் இந்த படத்திலும் ரசிகர்களை ஏமாற்றவில்லை. வழக்கம்போல நடிப்பிலும் அசத்தியுள்ளார். ஸ்கெட்ச் போட்டு வண்டியை தூக்குவது, காதல், நண்பர்கள் சென்டிமென்ட் என படத்தின் பல இடங்களில் அவரது நடிப்புக்கு தியேட்டரில் க்ளாப்ஸ் அள்ளுகிறார்.

ஹீரோயின் தமன்னாவுக்கு பெரிய ரோல் இல்லை என்றாலும், கச்சிதமாக நடித்துள்ளார். தமனின் பாடல்கள் சுமார் ரகம்.

விக்ரமின் நடிப்பில் மற்றுமொரு பொழுதுபோக்கு திரைப்படம்.

-தல தளபதி

Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.