ரஜினியின் காலா வெளியீட்டு தேதி அறிவிப்பு!

By இந்நேரம் February 10, 2018

சென்னை(10 பிப் 2018): ரஜினியின் காலா திரைப்படம் ஏப்ரல் 27 ஆம்தி தேதி வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வொண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாராகியுள்ள திரைப்படம் காலா. இந்த படத்தில் அவருடன் ஹுமா குரேஷி, நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திர கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

நடிகர் தனுஷ் தயாரிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயண் இசையமைத்து உள்ளார். இந்த படம் வருகிற ஏப்ரல் 27ந்தேதி திரைக்கு வரும் என நடிகர் தனுஷ் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

Rate this item
(0 votes)