இணையத்தில் வெளியான ரஜினியின் காலா பட காட்சி: அதிர்ச்சியில் படக்குழு!

By இந்நேரம் February 12, 2018

சென்னை(12 பிப் 2018): ரஜினியின் காலா படத்தின் சண்டை காட்சி இணையத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் காலா. முதலில், ஷங்கர் இயக்கத்தில் தயாராகிவரும் '2.0' படம் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், படத்தில் கிராஃபிக்ஸ் பணிகள் முடியாததால், 'காலா' படம் முதலில் வெளியாகும் என படக் குழு அறிவித்தது. இரு தினங்களுக்கு முன்னர் படத்தைத் தயாரிக்கும் நடிகர் தனுஷ், இந்த அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டார். 'காலா' படம், வரும் ஏப்ரல் 27-ல் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 'காலா' படத்தின் சண்டைக் காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் திருட்டுத் தனமாக வெளியாகி, வேகமாகப் பரவிவருகிறது. அதில் ரஜினி, வில்லன் ஒருவரைத் தாக்கும் காட்சி பதிவாகியுள்ளது. இதனால், படக் குழு அதிர்ச்சியடைந்துள்ளது.

ரஜினி பா.ரஞ்சித் கூட்டணியில் வெளிவந்த 'கபாலி', ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Rate this item
(0 votes)