Tuesday, 07 March 2017 17:00

பெங்களூர் கிரிக்கெட் டெஸ்டில் ஆஸ்திரேலியா அதிர்ச்சி தோல்வி! Featured

Written by இந்நேரம்
Rate this item
(0 votes)

பெங்களூர்(07 மார்ச் 2017): பிசிசிஐக்கு எதிரான பெங்களூர் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி எதிர்பாராதவிதமாக தோல்வியை தழுவியது.

பிசிசிஐ- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூரில் நடந்தது. இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 276 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸில் 274 ரன்கள் எடுத்து. புஜாரா 92, ரஹானே 52, ராகுல் 51 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து 188 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 112 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இந்திய அணி சார்பில் அஸ்வின் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, சுழல் ஜாலம் செய்தார். யாதவ் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் 28 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில், இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையில் உள்ளன.

 

Read 486 times Last modified on Tuesday, 07 March 2017 16:33
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.