கேப்டன் விராட் கோலி விலகல்! Featured

By இந்நேரம் March 25, 2017 610

தர்மசாலா(25 மார்ச் 2017): தோள்பட்டை வலி காரணமாக தர்மசாலா கிரிக்கெட் டெஸ்ட் போட்டியிலிருந்து கேப்டன் விராட் கோலி விலகியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3–வது டெஸ்ட் போட்டியில் பிசிசிஐ கேப்டன் விராட் கோலி வலது தோள்பட்டையில் காயமடைந்தார். இதனால் ஒரு நாள் முழுவதும் அவர் பீல்டிங் செய்யவில்லை. சிகிச்சை எடுத்துக் கொண்டு பேட்டிங் செய்தார். ஆனாலும் ஜொலிக்கவில்லை.

இந்த நிலையில் காயம் முழுமையாக குணமடையாததால் தர்மசாலாவில் நடைபெறும் கடைசி டெஸ்டில் விராட் கோலி விளையாடவில்லை. விராட் கோலிக்கு பதிலாக ரகானே கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rate this item
(0 votes)
Last modified on Saturday, 25 March 2017 09:43