இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி: மீண்டும் வாய்ப்பு! Featured

By இந்நேரம் March 29, 2017 532

புதுடெல்லி(29 மார்ச் 2017): இந்தியா பாகிஸ்தான் இடையே மீண்டும் கிரிக்கெட் போட்டி நடைபெற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

துபாயில் கடந்த ஆண்டு இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெறவிருந்த கிரிக்கெட் போட்டி மத்திய அரசு அனுமதி மறுத்ததால் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது. இதற்கான ஒப்பந்தம் கடந்த 2014 ஆம் ஆண்டு கையெழுத்தானது.

இந்நிலையில் பாகிஸ்தானுடனான தொடரை நடத்த தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள பி.சி.சி.ஐ இதற்காக உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரியுள்ளது. மத்திய அரசு அனுமதிக்கும் பட்சத்தில் மீண்டும் இந்தியா பாகிஸ்தான் போட்டி நடைபெறும் என எதிர் பார்க்கப் படுகிறது.

Rate this item
(0 votes)
Last modified on Wednesday, 29 March 2017 16:42