கரோலினாவை பழிக்குப் பழி வாங்கிய சிந்து! Featured

By இந்நேரம் April 03, 2017 460

புதுடெல்லி(03 ஏப் 2017): இந்திய ஓபன் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சிந்து கரோலினாவை வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

துடெல்லியில் இந்திய ஓபன் பேட்மிண்டனுக்கான இறுதி போட்டி இன்று நடந்தது. இதில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் ஸ்பெயின் நாட்டின் கரோலினா மெரீன் ஆகியோர் மோதினர். இந்த போட்டியில் 21-19, 21-16 என்ற செட் கணக்கில் மெரீனை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார் சிந்து.

கடந்த 2016ம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியின் இறுதி சுற்றில் கரோலினாவை எதிர்த்து சிந்து மோதினார். இதில் தோல்வி அடைந்த சிந்து வெள்ளி பதக்கம் வென்றார். இந்நிலையில், இன்று நடந்த இந்திய ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டியில் கரோலினாவை வீழ்த்தி பழிக்குப் பழி வாங்கியுள்ளார்.

PV Sindhu put that to rest by beating Olympic champion Carolina Marin in the women's singles final to win her maiden India Open Super Series title on Sunday.

Rate this item
(0 votes)