இந்திய கிரிக்கெட் அணியின் சீருடை மாற்றம்! Featured

By இந்நேரம் May 05, 2017 560

மும்பை (05 மே 2017): இந்தியாவின் பிசிசிஐ கிரிக்கெட் அணியின் சீருடை மாற்றம் செய்யபப்டுகிறது.

மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிசிசிஐ தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரி புதிய சீருடையை அறிமுகம் செய்துவைத்தார். சீருடையின் முன் பகுதியில் புதிய ஸ்பான்சரான சீனாவை சேர்ந்த மொபைல் நிறுவனமான ஓப்போ செல்போனின் பெயர் இடம் பெற்றுள்ளது.

வரும் ஜூன் 1-ம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ள ஐசிசி சாம்பியன் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், இந்த புதிய சீருடை அணிந்து விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Rate this item
(0 votes)