இர்ஃபான், யூசுப் பதான் சகோதரர்களின் நான்காவது கிரிக்கெட் அகாடமி! Featured

By இந்நேரம் May 16, 2017 576

லுனாவாடா(16 மே 2017): கிரிக்கெட் வீரர்கள் இர்ஃபான் பதான் மற்றும் யூசுப் பதான் சகோதரர்கள் குஜராத்தில் கிரிக்கெட் அகாடமி ஒன்றை திறந்துள்ளனர்.

பிசிசிஐ அணிக்காக விளையாடி பல சாதனைகள் படைத்த பதான் சகோதரர்கள் தற்போது ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் குஜராத்தில் உள்ள லுனாவாடாவில் ‘கிரிக்கெட் அகாடமி ஆஃப் பதான்’ என்ற கிரிக்கெட் விளையாட்டுக்கான அகாடமியை திறந்து வைத்துள்ளனர். இது அவர்களுடைய நான்காவது அகாடமியாகும்.

இன்னும் சில மாதங்களுக்குள் இந்தியாவின் முக்கியமான ஐந்து நகரங்களில் அகாடமியை திறக்க முடிவு செய்துள்ளனர். இதுபோன்று இந்தியா முழுவதும் 20 அகாடமிக்களை திறக்க முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்த இந்த அகாடமியின் இயக்குநர் இர்ஃபான் பதான், ‘‘தற்போது இந்தியாவில் திறமைக்கு பஞ்சம் இல்லை. ஆனால், அவர்களுக்கு ஆலோசகர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் வழிநடத்திச் செல்பவர்கள் தேவைப்படுகிறது. இளைஞர்கள் மற்றம் குழந்தைகளை இந்திய அணியில் விளையாடும் வகையில் தரமான வீரர்களாக உருவாக்கும் மையமாக சிஏபி இருக்கும்’’ என்றார்.

Irfan and Yusuf Pathan have launched their fourth Cricket Academy to provide some quality cricket coaching which will play a big role in promoting cricket in various parts of the country. The Pathan brothers have planned it big, as they are aiming to open 20 academies in the country by the end of the year. And the duo is also planning to open ‘Cricket Academy of Pathan’ in five different cities in India.

Rate this item
(0 votes)