Thursday, 08 June 2017 22:52

சாம்பியன்ஸ் ட்ராஃபி கிரிக்கெட்: இந்தியா(பிசிசிஐ) அதிர்ச்சித் தோல்வி! Featured

Written by இந்நேரம்
Rate this item
(0 votes)

லண்டன்(08 ஜூன்2017): சாம்பியன்ஸ் ட்ராஃபி கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் பிசிசிஐ அணி தோல்வியடைந்தது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 8-வது ஆட்டம் லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. முக்கியமான இந்த லீக் ஆட்டத்தில், குரூப் பி பிரிவில் உள்ள இந்தியா-இலங்கை அணிகள் மோதின.

நாணயசுழற்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் மேத்யூஸ் பந்துவீச்சை தெரிவு செய்தார். இதனையடுத்து விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 321 ஓட்டங்கள் குவித்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 138 ஓட்டங்கள் எடுத்தது.

சிறப்பாக விளையாடி 78 குவித்து ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். அணித்தலைவர் கோஹ்லி டக் அவுட் ஆனார். யுவராஜ் 7 ஓட்டங்களில் போல்டாகி பெவிலியன் திரும்பினார். பின்னர், ஷிகார் தவானுடன், டோனி ஜோடி சேர்ந்தார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஷிகார் தவான் சதம் விளாசினார். 128 பந்துகளில் 125 ஓட்டங்கள் எடுத்த போது ஷிகர் தவான் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய டோனி 46 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருப்பினும், 52 பந்துகளில் 63 ஓட்டங்கள் எடுத்த நிலையில் டோனி ஆட்டமிழந்தார். கடைசியில் ஜாதவ் 13 பந்துகளில் 25 ஓட்டங்கள் அடிக்க இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 50 ஓவர்கள் முடிவில் 321 ஓட்டங்கள் குவித்தது.

இலங்கை அணி தரப்பில் மலிங்கா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து 322 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆடிய இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை அணி 48.4 ஓவர்களில் 322 ரன்கள் குவித்து வெற்றியை புசித்தது.

Read 508 times
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.