மகளிர் உலகக்கோப்பை: 95 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வி! Featured

By இந்நேரம் July 02, 2017 496

டெர்பி(02 ஜூலை 2017): மகளிர் உலகக்கோப்பை போட்டில் பாகிஸ்தானை இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான ஐ.சி.சி. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று டெர்பி நகரில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்தியாவின் பூனம் ராவத் (47), விக்கெட் கீப்பரான சுஷ்மா தேவி (33) மற்றும் தீப்தி சர்மா (28) ரன்கள் எடுத்தனர். மந்தனா (2), மிதாலி ராஜ் (8), ஹர்மன்பிரீத் கவுர் (10), மோனா (5), ஜூலான் கோஸ்வாமி (14), ஏக்தா பிஷ்த் (1) ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

மான்சி (4) மற்றும் பூனம் (6) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். போட்டியின் முடிவில், முதலில் பேட் செய்த இந்தியா 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்திருந்தது.

இதனை தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியில் நஹீதா கான் (23) மற்றும் சனா மீர் (29) அதிக ரன்களை எடுத்தனர். மற்றவர்கள் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இதனால் அந்த அணி 38.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 74 ரன்கள் எடுத்தது. இந்தியா 95 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.

ICC Women's World Cup 2017: Ekta Bisht Shines As India Decimate Pakistan By 95 Runs

 

Rate this item
(0 votes)