Sunday, 16 July 2017 12:16

மிதாலி ரஜ் அபாரம்: உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி! Featured

Written by இந்நேரம்
Rate this item
(0 votes)

பெர்பி(16 ஜூலை 2017): உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அரையிறுதிக்குள் நுழைந்தது.

11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இந்திய மகளிர் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று நியூசிலாந்துடன் மோதியது. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்குள் நுழைய முடியும் என்ற நெருக்கடியில் விளையாடியது.

முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 265 ரன் எடுத்தது. கேப்டன் மிதாலி ராஜ் சதம் (109 ரன்) அடித்தார்.

அடுத்து விளையாடிய நியூசிலாந்து 25.3 ஓவரில் 79 ரன்னுக்கு சுருண்டது. இதனால் இந்தியா 186 ரன் வித்தியாசத்தில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இந்தியா 7 ஆட்டத்தில் 5 வெற்றி, 2 தோல்வி பெற்று 10 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்தது.

அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய மகளிர் அணிக்கு, விளையாட்டு வீரர்கள், நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

 

Read 438 times
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.