Tuesday, 18 July 2017 14:12

மனைவியுடன் செல்ஃபி எடுத்து வெளியிட்ட இர்ஃபான் பதானுக்கு கடும் எதிர்ப்பு! Featured

Written by இந்நேரம்
Rate this item
(0 votes)

புதுடெல்லி(18 ஜூலை 2017): பிசிசிஐ ஆல்ரவுண்டர் இர்ஃபான் பதான் அவரது மனைவியுடன் செல்ஃபி எடுத்து வெளியிட்ட புகைப்படம் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

பிசிசிஐ அணியின் வேகப் பந்து வீச்சாளராக அறிமுகமாகி பேட்டிங்கிலும் பெயர் பெற்றவர் இர்ஃபான் பதான். சமீப காலமாக அவர் அணியில் இடம்பெறவில்லை.

இந்நிலையில் 32 வயதான இர்ஃபான் பதான் அவரது மனைவி சஃபா பைக் உடன் காரில் வைத்து ஒரு செல்ஃபி போட்டோ எடுத்து சமூக வளைதளத்தில் வெளியிட்டுள்ளார். அவரது மனைவி முகத்தை கையால் மறைத்துள்ளபோதும் அவர் மீது மரியாதை வைத்திருக்கும் சில ரசிகர்கள் இந்த புகைப்படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த வருடம் பிசிசிஐ வேகப்பந்து வீச்சாளர் முஹம்மது சமி அவரது மனைவியுடன் இணைந்து வெளியிட்ட புகைப்படமும் விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.

One of the famous Indian bowler to represent the Indian Cricket Team world wide Irfan Pathan was brutally trolled on Facebook for posting a selfie with his wife Safa Baig.

Read 661 times
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.