இந்திய கிரிக்கெட் வீரர் முஹம்மது ஷமி மீது தாக்குதல்! Featured

By இந்நேரம் July 19, 2017 733

கொல்கத்தா(19 ஜூலை 2017): பிசிசிஐ கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஹம்மது ஷமி மீது தாக்குதல் நடத்திய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முஹம்மது ஷமி இருதினங்களுக்கு முன்னர் மனைவி, தனது மனைவி மற்றும் மகளுடன் ஷாப்பிங் போய்விட்டு காரில் வீடு திரும்பினார். வீடு அமைந்துள்ள கட்டிடத்தின் முன்பாக காரை ஓட்டுநர் நிறுத்தியுள்ளார். கேட்டை திறக்க ஊழியர் வந்துள்ளார். இந்நிலையில் ஷமி காருக்கு பின்னால் பைக்கில் வந்த மூன்று இளைஞர்கள், காரிலிருந்து இறங்கிய முஹம்மது ஷமியை தாக்கியுள்ள்னர்.

கார் ஓட்டுநர் தடுத்தும் அவர்கள் தாக்குதலை நிறுத்தவில்லை. ஒட்டுநருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. மனைவி, மகள் கண் எதிரிலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதையடுத்து முகமது ஷமி அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சி.சி.டி.வி வீடியோவை வைத்து தாக்கியவர்கள் யாரென்று அடையாளம் கண்டனர். அவர்கள் ஸ்வார்ப் சர்க்கார், ஜயந்த சர்க்கார், மற்றும் சிவ ப்ரமானிக் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து மூவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே அவர்கள் மூவரும் குடி போதையில் இருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Three persons were arrested by the police for manhandling Indian cricketer Mohammed Shami in front of his apartment

Rate this item
(0 votes)