Friday, 21 July 2017 12:52

உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் இந்தியா! Featured

Written by இந்நேரம்
Rate this item
(0 votes)

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய(பிசிசிஐ) அணி வீழ்த்தியது.

2வது அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலிய அணிகள் மோதின. போட்டி நடைபெறும் பகுதியில் மழை பெய்ததால் ஆட்டம் தொடங்குவதில் 3 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது.

42 ஓவர்கள் கொண்ட போட்டியாக இன்றைய ஆட்டம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி 42 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 281 ரன்கள் எடுத்துள்ளது. இதில் இந்திய வீராங்கனை ஹர்மன் ப்ரீத் கவுர் 115 பந்துகளில் 171 ரன் குவித்து அசத்தலாக அடித்துள்ளார்.

இதனை அடுத்து 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 40.1 பவர் முடிவில் அணைத்து விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

இதனையடுத்து இந்தியா அணி வரும் ஞாயிறன்று இங்கிலாந்து அணியை இறுதிப் போட்டியில் எதிர் கொள்கிறது.

India beat Australia by 36 runs to book their place in the ICC Women's World Cup final on Thursday.

 

Read 292 times
Add comment
Inneram.com moderator has right to block inappropriate comments. Please comment responsibly.